Thursday, 13 July 2017

தமிழ்நாடு குடிசை மாற்று வாாியம் மூலம் வீடு வழங்கும் திட்டம்

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே முதல் கட்டமாக 108 பயனாளிகளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாாியம் மூலம் குடிசை வீடு மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் அரசு மான்யம் 2.10 லட்சம் பெற்று சுயமாக வீடு கட்டுவதற்கான ஆணையை சட்டமன்ற உறுப்பினர் சார்பில் அவருக்கு பதிலாக நகர கழக செயலாளர் க.சிவசண்முகம் அவர்கள் இன்று இரண்டாம் கட்டமாக 36 பயனாளிகளுக்கு அரசு ஆணையை வழங்கினார்.

    உடன் வார்டு உறுப்பினர்கள், களபக்காடு மதன், மணிவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்பணம் நான்கு பிாிவுகளில் பயணாளியின் வங்கி கணக்கில்   வரவு வைக்கப்படும்.

1. கட்டிட அடித்தளம் போட்டவுடன் - ரூ.50,000
2. கட்டிட லின்டல் அமைத்த பின் - ரூ.50,000
3. கான்கிாிட் தளம் வந்தவுடன் - ரூ.50,000
4. கட்டிடத்தின் அனைத்து வேலைகளும் முடிந்தவுடன் - ரூ.60,000
ஆக மொத்தம் - ரூ.2,10,000