புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 91 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிாியர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ. சண்முகம், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர் சிவ. சண்முகம், சித்திரைவேல், காரக்கோட்டை சேது, செல்லமுத்து, இன்சார், வர்த்தக சங்க தலைவர் ஜெயராமன், பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








