புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை நகர் மன்ற கட்டிடத்தில் நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 2 ம் நாள் துவக்க விழாவில் கௌரவ விருந்தினராக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையில், ம.வீரமுத்து மாவட்ட கழக செயலாளர் TNSF, மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. நன்றியுரை கவிஞர் சோலச்சி வழங்கினார்

























