Saturday, 25 February 2017

அறந்தாங்கியில் அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர கழக சார்பில் மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 69 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை அருகில் நடைபெற்றது.

      விழாவில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை மற்றும், தையல் இயந்தரம் -10 நபர்களுக்கு, சலவைப் பெட்டி -10 நபர்களுக்கும் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை அறநந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ.சண்முகம் ஏற்பாடு செய்தார். விழாவில் 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.