Sunday, 12 March 2017

ரெத்தினக்கோட்டையில் கபாடி போட்டி துவக்க விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ரெத்தினக்கோட்டையில் கபாடி போட்டியை மாவட்ட கழக அவைத் தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், செல்லக்கன்னு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.