Thursday, 13 July 2017

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு நிதி

       தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறையின் மானிய கோாிக்கையின் போது அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ஏற்கனவே அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், அடிப்படை வசதிகள் செய்துதர கோாியும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கோாிக்கை வைத்தார்.
      தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத்தில் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு தீவிர கண்காணிப்பு பிாிவு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 1 கோடியே 30 இலட்சம் மதிப்பில் ஏற்படுத்தி தரும் என்று அறிவித்துள்ளார்கள். 
    இதுபோல் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த என் தொகுதி மக்களுக்கு இன்னும் பல திட்டங்களை என்னால் முடிந்தவரை கொண்டு வருவேன் என்பதை தொிவித்துக் கொள்கிறேன்.