Tuesday, 11 July 2017

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் பகுதியில் ஆழ்துளை கிணறு பூமி பூஜை

        புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பகுதியில் வறட்சியை சமாளிக்கும் வகையில் அறந்தாங்கிி நகராட்சி வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் புதிய ஆழ்தளை குழாய் கிணறு அமைக்கும் பணிக்கு பூமி பூஜையை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தொடங்கி வைத்தார்.
        அருகில் நகராட்சி அலுவலர்கள், நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், சுப்பையா. வட்டக் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.