Thursday, 18 June 2020

பொன்னமங்கலம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகாிப்பான் துவக்க விழா

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம், பொன்னமங்கலம் ஊராட்சி கடவாக்கோட்டை கிராமத்தில் குடிநீா மிகவும் உப்பாக இருப்பதாக சட்டமன்ற உறுப்பினாிடம் ஊராட்சி மன்ற தலைவரும், பொதுமக்களும், கோாிக்கை வைத்தனர். உடனடியாக தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதயிலிருந்து ரூ.9,82,000 நிதி ஒதுக்கீடு செய்து பொதுமக்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
                நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் முகமமு இக்பால் ஏற்பாடு செய்திருந்தார். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் குடிநீர் சுத்திகாிப்பான் இயந்திரத்தை துவக்கி வைத்து பொதுமக்கள் சுத்தமான குடிநீர் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.