Tuesday, 29 September 2020

மீமிசலில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தல்

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் ஊராட்சி மீமிசல் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான புதிய பேருந்து நிலையத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும். பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.3 லட்சமும் ஆக மொத்தம் ரூ.18 லட்சம் திப்பில் புதிய பேருந்து நிலையத்தை கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்.

      உடன் ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் தற்டபோதைய ஒன்றிய குழு உறுப்பினருமான ஜோதி, மீமிசல் பகுதி கழக நிர்வாகிகளும், ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.