Thursday, 28 May 2020

ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்து துவக்க விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளிலுள்ள ஏாி கண்மாய்களை புரனமைக்க தமிழக அரசு 2020-2021-ம் ஆண்டிற்கான குடிமராமத்துப் பணிகிளில் பெருநாவலூர் ஊராட்சிக்குட்பட்ட பெருநாவலூர் ஏாி புரனமைக்க ரூ.46.65 இலட்சமும், குடிக்காடு கண்மாய் புரனமைக்க ரூ.55.00 இலட்சமும், தொண்டைமானேந்தல் கிராமம் எட்டிச்சோி கண்மாய் புரனமைக்க ரூ.60.00 இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்தது இந்த ஏாி, கண்மாய்களை புரனமைக்கும் பணியினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவங்கி வைத்தார். 

                உடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஏாி, கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர்கள், ஆயக்கட்டுதாரர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





















Monday, 25 May 2020

அறந்தாங்கி ஒன்றியத்தில் குடிமராமத்து பணி துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி ஒன்றியத்தைச் சார்ந்த குளத்தூர் கண்மாய் ரூ.54.25 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் கோங்குடி கண்மாய் ரூ.47.50 இலட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து பணிகள் 2020-21-ம் ஆம் ஆண்டில் செய்ய தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு குடிமராமத்துப் பணிக்கான துவக்க விழாவினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் இன்று துவக்கி வைத்த பொழுமு உடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஆயக்கட்டுதார்கள், ஆயக்கட்டு சங்க தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








Thursday, 21 May 2020

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய மானிய விலையில் டிராக்டர் வழங்குதல்

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் மற்றும் அறந்தாங்கி வட்டார வேளாண்மை விாிவாக்கம் மையங்கள் மூலமாக 100 விவசாயிகள் கொண்ட உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு தமிழக அரசு மூலம் மானிய விலையில் டிராக்டர் மற்றும் பவர் டில்லர்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசாபதி அவர்கள் அறந்தாங்கி வட்டார வுளா்மை விாிவாக்க மையத்தில் வழங்கினார். 
         இதில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 4 டிராக்டர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியமும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 3 டிராக்டர்களும், 1 பவர் டில்லரும் வழங்கப்பட்டது. டிராக்டருக்கு தலா ரூ.5 லட்சமும், பவர் டில்லருக்கு ரூ.1 இலட்சமும் மானியமாக வழங்கப்பட்டது. 
              நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சக்திவேல், மாவட்ட ஆட்சியாின் நேர்முக உதவியாளா் வேளாண்மை சுப்புராஜ், துணை இயக்குநர் உழவர் பயிற்ச்சி மையம் பொியசாமி, வேளாண்மை  துணை இயக்குநர் மாநில திட்டம் மோகன்ராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் ஆவுடையார்கோவில் ஜெயபாலன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அறந்தாங்கி சொர்ணபாரதி ஆகியயோர் கலந்து கொண்டனர்.










Wednesday, 20 May 2020

அாிமளம் ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்து துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட, அாிமளம் ஒன்றியம், 

1. குருங்களுர் ஊராட்சி ஏனங்கம் பொிய கண்மாய் மற்றும் காட்டு கண்மாய் ரூ.40 இலட்சம், 

2. மதகம் ஊராட்சி மதகம் பொிய ஏாி ரூ.40 இலட்சம், 

3. மதகம் ஊராட்சி  தானிக்காடு, பிள்ளையடி மற்றும் கருத்தங்குடி கண்மாய் ரூ.52 இலட்சம், 

4. ஏம்பல் ஊராட்சி ஏம்பல் சாத்தக் கண்மாய் ரூ.51 இலட்சம். 

5. இச்சிக்கோட்டை பொிய கண்மாய் ரூ. 51 இலட்சம்

     ஆகிய கண்மாய்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின் படி 2020-21-ம் ஆண்டிற்கான குடிமராமத்துப் பணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஆயக்கட்டுதார்கள், விவசாயிகள் கிராம பொதுமக்கள், மற்றும் கழக நிர்வாககிகள் பலர் கலந்து கொண்டனர்.