Monday, 29 May 2017

யமுனா உணவகம் திறப்பு விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி, பட்டுக்கோட்டை சாலையில் யமுனா உணவகத்தை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார். உடன் நகர கழக செயலாளர் சிவசண்முகம், 19 வார்டு கவுன்சிலர் பழனி கடை உாிமையாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Friday, 26 May 2017

அம்மா ஆரோக்கியத் திட்டம் துவக்கி வைப்பு

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அம்மா ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 30 வயது நிறைந்த அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய 19 வகையான மருத்துவ  சிகிச்சை பற்றி துவக்க விழா மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அரசு மருத்துவர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.















Tuesday, 23 May 2017

ஆலங்குடி திருவரங்குளம் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

     புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவரங்குளத்தில் உள்ள சிவன் கோவிலில் இந்து சமய அறநிிலையத்துறையின் கிழ்  மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கழக செயலாளர், மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர், மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனா்.




Monday, 22 May 2017

15 ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாத பகுதிக்கு தெருவிளக்கு துவக்கி வைப்பு

     அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட களபக்காடு பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாமல் மக்கள் பொிதும் அவதிப்பட்டார்கள். அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் முதல் கட்டமாக 5 விளக்குகள் புதிதாக மின் கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு அமைக்கப்படது. அதுபோல் மற்ற பகுதிகளில் விரைவாக பணிகள் நடைபெற்று வருகிறது.





Sunday, 21 May 2017

அறந்தாங்கி L.N.புரம் சன்னதிவயலில் போர் ஆய்வு

     அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட L.N.புரம் சன்னதிவயல் பதியில்   ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் புதிதாக போடப்படும் போரை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் நோில் சென்று பார்வையிடுகிறார். அருகில் நகர கழக செயலாளர் சிவசண்முகம், நகராட்சி ஊழியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சுப்பையா, இராமநாதன்ம, மணிவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.






அறந்தாங்கி வீரமாகாளி கோவில் குழு கூட்டம்

    அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் திருப்பணிக்குழு கூட்டம் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதிி அவர்கள் தலைமையில் பெற்றது.



Friday, 19 May 2017

மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் யாகம்

     17.05.2017 அன்று காலை 8.00 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மழை வேண்டி வருண ஜெபம் யாகம் அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவிலில் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களை தலைமையேற்று துவக்கி வைத்தார்.

   மேலும் விழாவில் அநற்தாங்கி அறநிலையத்துறை கணக்கர் கண்ணன், நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், வட்ட கழக செயலாளர்கள். பெ.மெய்யப்பன் ஆவணத்தாங்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற துணை தலைவர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





Tuesday, 16 May 2017

போக்குவரத்து பணிமனையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை

      16.05.2017 அன்று தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த்தை நிவர்த்தி செய்யும் வகையில் அறந்தாங்கி போக்குவரத்து பனிமனையில் தற்காலிக வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை நியமித்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்த போது


Monday, 15 May 2017

மீமிசல் போர் ஆய்வு

    மீமிசல் பகுதியில் வறட்சியின் காரணமாக ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்க புதிதாக போடப்பட்டு வரும் போரை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள்நோில்   சென்று ஆய்வு மேற்கொண்ட போது