Wednesday, 4 March 2020

பிறந்தநாள் விழாவில்



9வது வார்டு கல்லுச்சந்து பாலம் ஆய்வு

          அறந்தாங்கி நகராட்சியின் வார்டு எண்.9-ல் கல்லுச்சந்து செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பாலம் பழுதை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் நோில் சென்று ஆய்வு செய்து உடன் நடவடிக்கை எடுக்க நகராட்சி பொறியாளர் பாஸ்காிடம் உத்தரவிட்டார். 
          உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் இராஜநாயகம், நகர கழக செயலாளர் ஆதிமோகன், மண்டலமுத்து, ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, கல்லுச்சந்து ராஜா, வட்ட கழக நிர்வாகிகள், மற்றம் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



1 முதல் 5 வரையுள்ள வார்டுகளில் ஆய்வு

   புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அறந்தாங்கி நகராட்சி வார்டு 1 முதல் 5 வரையுள்ள பகுதிகளில் நடைபெறவிருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றவும், வார்டுகளில் உள்ள குறைகளை கேட்டு அதற்கான தீர்வு காண்பதற்காகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மற்றும் மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து ஆகியோாின் ஆலோசனையின் படி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜநாயகம், அறந்தாங்கி ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, மாவட்ட சிறுபான்மை செயலாளர் லியாக்கத் அலி  ஆகியோருடன் முதல் 5 வார்டுகளில் உள்ள குறைகளை கேட்டறிந்தனர்.
      நிகழச்சிக்கு நகர கழக செயலாளா் ஆதிமோகன், மண்டலமுத்து, மற்றும் அந்தந்த வட்ட கழக செயலாளர்கள்,  கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, கழிவு நீர் பிரச்சனை, இலவச வீட்டுமனை வழங்க கேட்டு மக்கள் மனு கொடுத்தனர்.












பெருநாவலூர் அரசு கலைக்கல்லூாியைச் சுற்றி சுத்தம் செய்ததை ஆய்வு செய்தபோது

       அறந்தாங்கியில்  கடந்த  10 ஆண்டுகளுக்கு  முன் திருச்சிராப்பள்ளி  பாரதிதாசன்  பல்கலைக் கழகத்தால், பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியாக அரசினர் தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில்  தொடங்கப் பெற்றது. கடந்த  2015 ஆண்டில் அறந்தாங்கியை அடுத்துள்ள பெருநாவலூரில் தற்போதைய கட்டமைப்புடன் செயற்படத் தொடங்கியது. 2019 ஆண்டு முதல்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகத்    தொடர்ந்து இயங்கி  வரும்  இக்கல்லூரியின்  நான்கு புறங்களிலும்  அதிகளவு கருவேல மரங்களும் முட்புதர்களும் மண்டிக்கிடந்த நிலையில், தற்போது  இக்கல்லூரியின்  முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர் இரா.கண்ணன்  அவர்கள் இந்நிலைக்கான தீர்வு காணும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினரை அனுகி கோாிக்கை வைத்தார். அதன் பலனாக அறந்தாங்கி சட்டமன்ற  உறுப்பினர்  இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள், கல்லூரி  முதல்வர்  அவர்களின்  வேண்டுகோளை ஏற்று மாணவ,மாணவியர்  நலன் கருதி தனது சொந்த  செலவில் கல்லூரியைச் சுற்றிலும்  அடர்ந்துள்ள முட்புதர்களை அகற்றும் பணியை JCB இயந்திரம் கொண்டு தொடங்கி  வைத்தார்.    தொடங்கப்பட்டுள்ள பணிகளை  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், கல்லூரி முதல்வர்  அவர்களும் பார்வையிட்டனர். உடன் கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளனர்.