மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவான இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தேர்தல் 2021க்கு அறந்தாங்கி தொகுதிக்கு போட்டியிட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் சென்னையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்து ரசீது பெற்றுக்கொண்டார்.
Wednesday, 24 February 2021
Saturday, 13 February 2021
புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிக்கப்பட்ட பணிகள் திறப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் திருப்புனவாசல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து முடிக்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவினை அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்.
திருப்புனவாசல் ஊராட்சி
1. பூவடியேந்தல் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா.
2. பொய்யாதநல்லூர் பிள்ளையார்கோவில் ஊரணிக்கு ாிவிட்மெண்ட் மற்றும் படித்துறை கட்ட அடிக்கல் நாட்டு விழா
3. திருப்புனவாசல் பேருந்து நிறுத்தம் அருகில் பைப்லைன் விஸ்தாிப்பு மற்றும் புதிய சின்டெக்ஸ் டேங்க் திறப்பு விழா
புத்தாம்பூர் ஊராட்சி
1. மாதவனேந்தல் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
2. எழுகணிவயல் சர்ச் அருகில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
நிகழ்ச்சியில் ஆவடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் கூத்தையா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நரேந்திரஜோதி, ஊராட்சிமன்ற தலைவர்கள், து.தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒப்பந்தகாரர் இளையராஜா, கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tuesday, 9 February 2021
கரூர் ஊராட்சி கோணோியேந்தல் கிராமத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு பூமி பூஜை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம், கரூர் ஊராட்சி கோணோியேந்தல் கிராமத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோாிக்கையை ஏற்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினாின் சீாிய முயற்சியில் இன்று புதிய ஆழ்குழாய் கிணறுக்கான பூமி பூஜையை அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் கூத்தையா, ஜோதி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tuesday, 2 February 2021
அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாிசளிப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற Basket Ball விளையாட்டு போட்டியினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாிசுக்கோப்பையினை வழங்கினார்





















































