Friday, 28 July 2017

பிராமணவயலில் மக்கள் தொடர்பு முகாம்

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியம், பிராமணவயலில் மக்கள் தாடர்பு முகாமினை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்கள்.
       விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 







கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மணமேல்குடி வட்டம், மின்னாமொழி கிராமத்தில் ஆடு மாடுகளுக்கு இனப்பெருக்க பாிசோதனை மற்றும் குடற்புழு நீக்க பாிசோதனை செய்தல் மற்றும் தடுப்புசி போடுதல் முகாமினை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபபதி அவர்கள் தலைமையேற்றி துவக்கி வைத்தார்கள்.
       முகாமில் கரகத்திக்கோட்டை மற்றும் ஆவுடையார்கோவில் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள், உதவியாளர்கள் மற்றும் கால்நடை உாிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர் முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயனடைந்தன.





Wednesday, 26 July 2017

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் தேர் திருவிழா

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி கோட்டை திடலிலிருந்து வடம்பிடித்து முதல் நாள் தேர் திருவிழாவில் தேர் துவக்கி வைத்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
             விழாவில் பக்தகோடிகளும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.







Sunday, 23 July 2017

விளானூர் ஊராட்சி வங்கநகரத்தில் புதிய ஆழ்துளை கிணறு பூமிபூஜை

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம், விளானூர் ஊராட்சி வங்கநகரத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பூமி பூஜை புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.





Thursday, 13 July 2017

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு நிதி

       தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறையின் மானிய கோாிக்கையின் போது அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ஏற்கனவே அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், அடிப்படை வசதிகள் செய்துதர கோாியும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கோாிக்கை வைத்தார்.
      தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத்தில் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு தீவிர கண்காணிப்பு பிாிவு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 1 கோடியே 30 இலட்சம் மதிப்பில் ஏற்படுத்தி தரும் என்று அறிவித்துள்ளார்கள். 
    இதுபோல் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த என் தொகுதி மக்களுக்கு இன்னும் பல திட்டங்களை என்னால் முடிந்தவரை கொண்டு வருவேன் என்பதை தொிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்நாடு குடிசை மாற்று வாாியம் மூலம் வீடு வழங்கும் திட்டம்

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே முதல் கட்டமாக 108 பயனாளிகளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாாியம் மூலம் குடிசை வீடு மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் அரசு மான்யம் 2.10 லட்சம் பெற்று சுயமாக வீடு கட்டுவதற்கான ஆணையை சட்டமன்ற உறுப்பினர் சார்பில் அவருக்கு பதிலாக நகர கழக செயலாளர் க.சிவசண்முகம் அவர்கள் இன்று இரண்டாம் கட்டமாக 36 பயனாளிகளுக்கு அரசு ஆணையை வழங்கினார்.

    உடன் வார்டு உறுப்பினர்கள், களபக்காடு மதன், மணிவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்பணம் நான்கு பிாிவுகளில் பயணாளியின் வங்கி கணக்கில்   வரவு வைக்கப்படும்.

1. கட்டிட அடித்தளம் போட்டவுடன் - ரூ.50,000
2. கட்டிட லின்டல் அமைத்த பின் - ரூ.50,000
3. கான்கிாிட் தளம் வந்தவுடன் - ரூ.50,000
4. கட்டிடத்தின் அனைத்து வேலைகளும் முடிந்தவுடன் - ரூ.60,000
ஆக மொத்தம் - ரூ.2,10,000









Tuesday, 11 July 2017

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் பகுதியில் ஆழ்துளை கிணறு பூமி பூஜை

        புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பகுதியில் வறட்சியை சமாளிக்கும் வகையில் அறந்தாங்கிி நகராட்சி வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் புதிய ஆழ்தளை குழாய் கிணறு அமைக்கும் பணிக்கு பூமி பூஜையை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தொடங்கி வைத்தார்.
        அருகில் நகராட்சி அலுவலர்கள், நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், சுப்பையா. வட்டக் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.







Sunday, 9 July 2017

பாரதி முற்றம் விருது வழங்கும் விழா

பாரதி முற்றம் அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழாவில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய மாண்புமிகு இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள்


Thursday, 6 July 2017

விவசாய மானியக் கோாிக்கையின் போது பேசியது

05.07.2017 அன்று நடைபெற்ற விவசாய மானிய கோாிக்கையில் புதுக்கோட்டை   மாவட்ட கழக அவைத்தலைவரும்,  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் உரையாற்றிய போது


Wednesday, 5 July 2017

இன்று சட்டமன்றத்தில் விவசாய மானிய கோாிக்கை

        இன்று நடைபெற்ற விவசாய மானியக் கோாிக்கையின் மீதான விவாதத்தின் போது புதுக்கோட்டை மாவட்ட அவைத் தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசாபாதி அவர்கள் உரையாற்றிய ஆடியோ