Sunday, 7 June 2020

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாாியம் மூலம் பயனாளிகளுக்கு ஆணை

               மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலை நோக்குத் திட்டம் 2023-ன் படி மைய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலுள்ள குடிசை - ஓட்டுவீட்டை அகற்றி 300 சதுர பரப்பளவுக்கு குறையாமல் கான்கீாிட் வீடுகளாக கட்டுவதற்கு ரூ.2.10 இலட்சம் அரசின் மானியமாக வழங்கப்பட்டு பயனாளிகள் 36 பேருக்கு இன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.
               கட்டுமான பணிகளான கட்டிட அடித்தளம் போட்ட பின் ரூ.50,000, கட்டிட லின்டல் போட்ட பின் ரூ.50,000, கான்கீாிட் தளம் போட்ட பின் ரூ.50,000, கட்டிடத்தின் எல்லா வேலைகளும் முடிக்கப்பட்ட பின் ரூ.60,000 என மொத்தம் ரூ.2.10 (ரூபாய் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் மட்டும்) மானியமாக வழங்கப்படும். நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாாிய உதவி செயற்பொறியாளர் சேதுமாதவன், நகர கழக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆதிமோகன், நகர அம்மா பேரவை செயலாளர் மண்டலமுத்து, மணிவாசகம், தாயுமாணவன், மனோகரன், செல்வம், தமிழ்செல்வன், செல்லத்துரை, கூம்பள்ளம் நடராஜன், கலாராணி, தங்கம்மாள், மலர் சசிகலா, ஸ்டெல்லா, தமிழரசி, ஸ்ரீதர், சுபமாறன், ராஜேந்திரபிரசாத், நாட்ராயன், பாலகிருஷ்ணன்,  நகர கழக நிர்வாகிகள், 27 வார்டு வட்ட கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.