புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி அரசு மருத்துவமனையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்களும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும் ஆய்வு செய்து மருத்துவமனை குறைபாடுகள், பராமாிப்புகள் பற்றி மருத்துவர்களிடமும். உள்நோயளிகளிடமும் கேட்டறிந்தனர். உடன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Friday, 21 February 2020
ஏம்பல் கிராமத்தில் எம்.எல்.ஏ நிதி 2019-20 நூலக கட்டிட பூமி பூஜை
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அாிமளம் ஒன்றியம் ஏம்பல் கிராமத்தில் புதிய நூலகம் கட்டிடம் கட்ட 2019-20 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிக்கான பூமி பூஜையை இன்று சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் செய்து வைத்த போது
நிகழ்ச்சியில் அாிமளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், குமரவேல் (வட்டார ஊராட்சி), ஆயிஷாராணி (கிராம ஊராட்சி), பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஒன்றிய பெருந்தலைவர், ஏம்பல் ஊராட்சிமன்ற தலைவர் கனிமொழி முருகானந்தம், பள்ளி தலைமை ஆசிாியர், குமாரராஜா, குணா, சுப்பையா, இளையராஜா, மாாிமுத்து மறறும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அாிமளம் ஒன்றியம் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 54 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை இன்று சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்..
நிகழ்ச்சியில் அாிமளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், குமரவேல் (வட்டார ஊராட்சி), ஆயிஷாராணி (கிராம ஊராட்சி), ஒன்றிய பெருந்தலைவர், ஏம்பல் ஊராட்சிமன்ற தலைவர் கனிமொழி முருகானந்தம், பள்ளி தலைமை ஆசிாியர், குமாரராஜா, குணா, சுப்பையா, இளையராஜா, மாாிமுத்து மறறும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஏம்பல் அரசு பள்ளியில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அாிமளம் ஒன்றியம் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2017-18 -ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் மதிவண்டி நிறுத்தும் கூடாரம் ஆகியவற்றை இன்று சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நிகழ்ச்சியில் அாிமளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், குமரவேல் (வட்டார ஊராட்சி), ஆயிஷாராணி (கிராம ஊராட்சி),ஒன்றிய பெருந்தலைவர், ஏம்பல் ஊராட்சிமன்ற தலைவர் கனிமொழி முருகானந்தம், பள்ளி தலைமை ஆசிாியர், குமாரராஜா, குணா, சுப்பையா, இளையராஜா, மாாிமுத்து மறறும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)



























