Friday, 22 June 2018

பேரானூர் கிராமத்தில் கலையரங்கம் திறப்பு விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம், பேரானூர் கிராமத்தில் அருள் புாியும் அருள்மிகு ஸ்ரீ 18ம் படி கருப்பர் சுவாமி ஆலயம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார்.
            விழாவில் ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு, அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர், கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுக்கள் பலர் கலந்து கொண்டனர்.





Thursday, 21 June 2018

தீயத்தூர் கிராமத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு தொடங்கி வைத்தல்

               புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு தொடங்கும் பணியை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு பணிகளை நோில் சென்று ஆய்வு செய்த போது



மீமிசல் பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு

      புதுக்கோட்டை மாவட்டம், ஆவடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் மற்றும் சத்திரம்பட்டினம் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான மீமிசல் பேருந்து நிலையம் அமைக்கவும், ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கோாி இருந்தார்கள் இவர்களின் கோாிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும் நோில் சென்று ஆய்வு செய்தனர். பின் பொன்பேத்தி கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்க இடத்தினை ஆய்வு செய்தனர். 




கொடிக்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்

           புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கொடிக்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.கணேஷ் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
         
      இந்த மக்கள் தொர்பு முகாமில் 283 பயனாளிகளுக்கு ரூ.42.51 லட்சம் மதிப்பீ்ட்டீல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது.

                  கோட்டைப்பட்டிணம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 50 ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனை தங்கள் இருக்கும் வீடுகளுக்கு வீட்டுமனைப் பட்டா இல்லாமல் இருந்தது. முன்னதாக 2000 வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 800 நபர்களுக்கு தங்கள் வசிப்பிடத்திற்கு உாிய வீட்டுமனைப் பட்டா வழங்க்கப்பட உள்ளது என்றும் அதும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வருவாய்த் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் கோாிக்கையை ஏற்று அறந்தாங்கியிலிருந்து வரும் பேருந்துகள் கோட்டைப்பட்டினம் வரை நீட்டிப்பு செய்ய உாிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசினார்.











            

Wednesday, 20 June 2018

மீனவர்கள் மீட்பு பணியில் சட்டமன்ற உறுப்பினர்

            புதுக்கோட்டை மாவட்டம்,  கோட்டைப்பட்டிணம் சரகம் வடக்கு புதுக்குடியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் காளிதாஸ் (35), பாலா (22) மணிகண்டன் (23), லேகேஸ்வரன் (20) ஆகிய 4 மீனவர்கள் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர் ஆனால் நான்கு  பேரும் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்து போது படகு கவிழ்ந்து காணாமல் போய்விட்டர் என்ற தகவல் கேட்டதும், மாவட்ட கழக அவைத்தலைவரும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்திசபாபதி அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளரும் சேர்ந்து மாவட்ட ஆட்சியாிடமும், மற்றும் மேல் அதிகாாிகளையும் தொடர்பு கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு தங்கள் சொந்த செலவில் மீனவர்களின் படகுகளுக்கு டீசல் போட்டு தேடும் பணியில் ஈடுபட்ட போது நால்வரும் மல்லிப்பட்டிணம் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று அவர்களை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து பின் அவர்களின் வீடுகளுக்கு கொண்டுபோய் சேர்த்து அறுதல் சொல்லிவிட்டு வந்தனர். 








Saturday, 16 June 2018

கூத்தாடிவயல் கிராமத்தில் கிாிக்கெட் போட்டி துவக்க விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி ரெத்தினக்கோட்டை ஊராட்சி, கூத்தாடிவயல் ஸ்ரீ அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு DX BOYS அனியினரால் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு கிாிக்கெட் போட்டியை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள். முதல் பாிசினை அறந்தாங்கி LNT அனியினரும், இரண்டாம் பாிசை DX BOYS அனியினரும், மூன்றாம் பாிசை புதுக்கோட்டை ராமாணா அனியினரும், நான்காம் பாிசை கதிர்அதிர்வாள் புரம் அனியினரும், ஐந்தாம் பாிசை குளமங்கலம் அனியினரும் பெற்றுச் சென்றனர்.
               நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் த.செல்வராஜ், ராஜ்குமார், பிள்ளைவயல் பஞ்சநாதன், மைவயல் கணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




Sunday, 10 June 2018

அறந்தாங்கி வீரம்மாகாளி அம்மன் கோவில் திருவிழா கூட்டம்

        புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வீரம்மாகாளியம்மன் கோவில் திருவிழா கொண்டாடுவது சம்மந்தமாக வீரம்மாகாளியம்மன் கோவிலில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது

Saturday, 9 June 2018

அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அறந்தாங்கி எல்.எண்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
                   நிகழ்ச்சியை பள்ளியின் முதல்வர் ஏற்பாடு செய்திருந்தார்.  நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், மீராமைதீன், வேதபாபு, அய்யப்பன், கானூர் ராஜா, கருப்பையா மற்றும் ஜமாத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.








Monday, 4 June 2018

அறந்தாங்கியில் தலைப்பாகட்டு பிாியாணி கடை திறப்பு விழா

            புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் வாகை மர பேருந்து நிறுத்தம் அருகில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிாியாணி கடையை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்திசபாபதி அவர்கள் திறந்து வைத்த போது.





கட்டுமாவடி ஸ்ரீ ராமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

   புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி கட்டுமாவடி கிராமத்தில் மீனவப் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் 04.06.2018 அன்று நடைபெற இருந்த நிலையில் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினாிடம் கோாிக்கை வைத்தனர். இவர்களின் கோாிக்கையை ஏற்று மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவரும், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளருமான பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்களும் சேர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை அனுகி பக்தர்கள் தீர்த்தம் ஆடுவதற்கு கடற்கரைக்குச் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு உடனடியாக போட்டு தருமாறு கோாிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவரும் கோாிக்கையை ஏற்று உடனடியாக சாலை புதுபிக்கப்பட்டு கும்பாபிஷேக நாளில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டபோது