புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அதன் பின் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்துவிட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகிலுள்ள தேவி கருமாாியம்மன் ஆலயத்திலும் சிறப்பு அபிஷேகம் செய்துவிட்டு கோவில் முன்பு சுமார் 5000 நபர்களுக்கு அன்னதான விழாவினை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் இ.ஏ.கார்த்திகேயன், இ.ஏ.பொியகருப்பன், ஆகியோரது தலைமையிலும், நகர கழக செயலாளர் க.சிவசண்முகம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், ராஜ்குமார், ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு, மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற துணை செயலாளர் மணிவாசகம், மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக, நிர்வாகிகளும், பொதுமக்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.




































































