Tuesday, 14 November 2017

அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 197 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத் தலைவரும், அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
         விழாவில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் மணிவாசகம், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், பள்ளி தலைமை ஆசிாியர், ஆசிாியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


















நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம்,  அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 123 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத் தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். 
       விழாவில் நகர கழக செயலாளர், ஒன்றிய கழக செயலாளர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், பள்ளி தலைமை ஆசிாியர், ஆசிாியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் கழக நிர்வாகிிகள் பலர் கலந்து கொண்டனர்.








சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி விழங்கும் விழா

           சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  202 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கி மாணவிகளுக்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் சிரப்புரையாற்றினார்.
         விழாவில் பள்ளி தலைமை ஆசிாியை, பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், கழக நிர்வாகிகள் பலர் கொண்டனர்.
















சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 176 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்ககணிணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையேற்று வழங்கினார். விழாவில் அறந்தாங்கி நகர கூட்டுறவு சங்கத் தலைவரும் அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ. சண்முகம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும், அறந்தாங்கி கூட்டுறவு நிலவள வங்கி துணைத் தலைவருமாகிய மணிவாசகம், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், இளையராஜா, அடைக்கலம், முருகையன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.