Friday, 22 January 2021

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியினை அறந்தாங்கி தொகுதியின் தூண்டா மணிவிளக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து மாணவ, மாணவிகளிடத்தில் சிறப்புரையாற்றிய போது.

    அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 271 மாணவர்களுக்கும், அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 370 மாணவிகளுக்கும், நாகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகளுக்கும், கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 51, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 122, மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 223, அம்மாபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 53, கோட்டைப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 37, கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 37, மீமிசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 67, ஆக மொத்தம் இன்று மட்டும் 1351 விலையில்ல மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியினை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

                நிகழ்ச்சியில் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் ரூ.5 ஆயிரம் ரெக்கம் மற்றும் பாராட்டுதலும் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிாியர், ஆசிாியைகள், ஆசிாியர்கள், நகர கழக செயலாளர் ஆதிமோகன், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர், மண்டலமுத்து, தாயுமாணவன், செல்வம், மனோகரன், முகமது ஹாரிஸ், மார்கண்டேயன், மாறன், ராசு, கலா, ரமா, முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனா்.
























Sunday, 17 January 2021

புரட்சித்தலைவரின் 104 வது பிறந்தநாள் விழா

            டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக அறந்தாங்கி நகரத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. 
         நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகர செயலாளர் ஆதிமோகன், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, அறந்தாங்கி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வேலாயுதம், வட்ட கழக நிர்வாகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





















Tuesday, 5 January 2021

அம்மா மினி கிளினிக், பொங்கல் பாிசு தொகுப்பு, 108 ஆம்பலன் சேவை

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகரம், மேலப்பட்டு, கண்டிச்சங்காடு நிலையூர், மணமேல்குடி, கோட்டைப்பட்டிணம், அம்பலவாணனேந்தல், ஆவடையார்கோவில் மற்றும் ஒக்கூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பாிசுத்தொகை ரொக்கம் ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பினை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாாியத்தலைவருமான பி.கே.வைத்து அவர்களும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி ஆகியோரது தலைமையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் அறந்தாங்கி ஒன்றியம் மேலட்டு கிராமம், மணமேல்குடி ஒன்றியம் நிலையூர், ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஒக்கூர் கிராமங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளிக் மற்றும் மணமேல்குடி ஒன்றியம் அம்பலவாணனேந்தல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் முதல் கோட்டைப்பட்டிணம் பகுதிக்கு 108 ஆம்புலன் சேவை ஆகியவையும், மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டிணத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்படும்  பயணிகள் நிழற்குடைக்கு பூமி பூஜை, ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு குளியலறை, உடைமாற்றும் அறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அம்மா பூங்கா, ஆவுடையார்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாாியத்தலைவருமான பி.கே.வைத்து அவர்களும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜநாயகம், அறந்தாங்கி நகர கழக நிர்வாகிகள், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்