புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி காந்தி பூங்கா (சந்தைப் பேட்டை) பகுதியில் திருவரங்குளம் மேற்கு மற்றும் நகர கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் காவோி - குண்டாறு- வைகை இணைப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றிய போது.
விழாவில் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன், தமிழ்மணி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் வி.சி.ராமையா, மணமோகன், குழ.சண்முகநாதன், கண்ணம்மாள் சின்னப்பா, மலர், பழனி, நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.







































