Thursday, 1 March 2018

பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

        புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ஆவுடையார்கோவில் ஒன்றியம், பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை  மார்ச் 1ம் தேதி மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் நோில் சென்று ஆய்வு செய்தார்.
         ஆய்வின் போது மருத்துவர் இங்கு உள்ள பழைய கட்டிடத்தை இடித்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருமாறும், மேலும் இங்கு ஒரே ஒரு செவிலியர் மட்டும் பணியாற்றுகிறார். எங்களுக்கு மேலும் 7 செவிலியர்கள் தேவை என்பதை கோாிக்கையாகவும் வைத்தார். சட்டமன்ற உறுப்பினரும் விரைவில் துறை அமைச்சரை அனுகி காலியிடங்களை நிரப்புவதற்கு முயற்சி செய்கிறேன் என்றார்.
          நிகழ்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து காண்டனர்.



ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் ஆய்வு பணி

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் ஊராட்சி ஆவாரங்குடி, கரூர் ஊராட்சி குமுளுர், சாட்டியக்குடி ஊராட்சி நல்கிராமம், அமரடக்கி ஊராட்சி அமரடக்கி, பொன்பேத்தி ஊராட்சி பருத்திவயல், தீயத்தூர் ஊராட்சி தீயத்தூர் மற்றும் கதிராமங்கலம் ஊராட்சி பொன்சிறுவரை ஆகிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சாிசெய்யும் விதத்தில் நவீன தொழில் நுட்பத்தில் பயன்படுத்தக் கூடிய நீருற்று உள்ள இடத்தை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் ஆய்வு செய்த போது.
                     உடன் ஊராட்சி ஒன்றிய ஆணையர், கிராம ஊராட்சி ஆணையர், ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு, கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 10திற்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் இருப்பதாக கண்டறியப்பட்டது.