Sunday, 24 December 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர் நினைவு நாளில் 
இன்னொரு மக்களின் செல்வர் உதயம்     

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்களின் செல்வர் டி.டி.வி.தினகரன் அவர்கள் வெற்றி பெற்றதை அறந்தாங்கி தொகுதி முழுவதும்  மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 
      நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் அறந்தாங்கி தெற்கு செல்வராஜ், அறந்தாங்கி வடக்கு ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் மணிவாசகம், சித்திரைவேல், காரக்கோட்டை சேது, வட்ட கழக செயலாளர்கள் பழனிராஜன், வேனுகோபால், வாசு, கார்த்திக், தனபால், பூமணி, சித்திரா, சதீஸ், கருப்பையா, சாமிநாதன், பஞ்சநாதன், முருகன், மீராமைதீன், அய்யப்பன், செல்வம், மதன், சுமதி, கராத்தே ராஜா, கணேசன், சுரேஸ், கனி, கொடிவயல் அடைக்கலம், இளையராஜா, சுப்பிரமணியன்ம மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




















பாரத இரத்தன புரட்சித்தலைவாின் 30 வது நினைவு நாள்

        பாரத இரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆா் அவர்களின் 30 வது ஆண்டு நினைவு நாளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்திய போது






Wednesday, 6 December 2017

மணலூர் ஊராட்சிக்கு ஆழ்குழாய் கிணறு துவக்க விழா

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், மணலூர் ஊராட்சி புத்துவயல் கிராமத்திற்கு நீண்ட நாள் கோாிக்கையான குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்கும் வகையில்  தமிழ அரசு மீலம்  26 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆகியவை பெற்றுத்தந்து துவக்க விழாவானது மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் கார்க்கமங்கலம் கிராமத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் நாடக  மேடை வழங்கியதற்கும் கிராமத்தார்கள் சார்பில் நன்றி சொல்லப்பட்டது.














Tuesday, 5 December 2017

அன்னையின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

   புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகாில் தொகுதி மக்களின் சார்பில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ. இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
        நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தாய்மார்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும்  கலந்து கொண்டு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கண்ணு, அறந்தாங்கி நகர வட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆா மன்ற துணை தலைவர் மணிவாசகம், கொடிவயல் அடைக்கலம், காிசக்காடு சுப்பிரமணியன், ராஜேந்திரபுரம் பன்னீர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.