Thursday, 27 February 2020

இன்றைய தினமலா் மற்றும் தினமணி





அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

     புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு அறந்தாங்கி வ.உ.சி. திடலில் அமைக்கப்பட்ட அரங்கத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். விழாவில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




மயில் மெட்ரிக் பள்ளி 24 வது ஆண்டு விழா

         அறந்தாங்கி நகாிலுள்ள மயில் மெட்ரிக் பள்ளியின் 24 வது ஆண்டு விழாவினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணிவகளுக்கு பாிசுகளை வழங்கி சிறப்புறையாற்றினார்.
            நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் வைரமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜநாயகம், பள்ளியின் முதல்வர் தவசீலன், பள்ளியின் தாளளர் சத்தியசீலன் ஆசிாியர்கள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






அறந்தாங்கி கோட்டை நூலக சுற்றுச்சுவர் திறப்பு விழா

           அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டை நூலக கட்டிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்த வைத்தார்கள்.