Thursday, 19 July 2018

கழக அமைப்புச் செயலாளருக்கு வாழ்த்து தொிவித்தல்

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பாராளுமன்ற தொகுதி பொருப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அறிவித்ததை அடுத்து மாவட்ட மகளிரணி வழக்குரைஞர் விஜயா மற்றம் அறந்தாங்கி நகர மகளிர் பலர் நோில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தொிவித்த போது






வைாிவயல் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு துவக்கி வைத்தல்

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ரெத்தினக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வைாிவயல் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையாக குடிநீர் வசதி அமைக்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினாிடம் கோாிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோாிக்கையை ஏற்று மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தனது தொகுதி வளாச்சி மேம்பாட்டு நிதியில் மூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மின் மோட்டார் மூலம் இயக்கி வைக்கப்பட்டது. 
            நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவசண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், பிள்ளைவயல் பஞ்சநாதன், காவல்துறை ஓய்வு கருப்பையா, மணிவசகம், சித்திரைவேலு, காரக்கோட்டை சேது, ஏகணிவயல் முருகையன் மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.


Monday, 16 July 2018

அறந்தாங்கியில் காந்தி பூங்கா பூமி பூஜை

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருகன் குளத்தில் இருந்த காந்திபூங்கா செயல்பாடற்று அறந்தாங்கி நகாில் பூங்கா இல்லாமல் மக்கள் பொிதும் அவதிப்பட்டு வந்தார்கள். மக்களின் நீண்டநாள் கோாிக்கையான காந்தி பூங்கா புரணமைக்கும் பணியில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பூமிபூஜை செய்து முதற்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டுவதாகவும், பின் சட்டமன்ற உறுப்பினர் நிதி, வர்த்தசங்கம், போன்ற சங்கங்களின் நிதியையும் திரட்டி பூங்கா செயல்பாட்டிற்கு கொண்டு வருவதாக முடிவு செய்யப்பட்டது.
               நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர், நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், கழக அவைத்தலைவர், பிள்ளைவயல் பஞ்சநாதன், வர்த்த சங்க நிர்வாகிகள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் மணிவாசகம், பழனிவேல் ராஜன், ஐயப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








Sunday, 15 July 2018

பாரதி முற்றம் விருது 2018

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலப்பட்டு ஜீவா திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாரதி முற்றம் அமைப்பின் சார்பாக நடைபெற்ற பாரதி முற்றம் விருது 2018 விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறு்பபினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பாரட்டினார்.