புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பயணிகளின் நீண்ட நாள் கோாிக்கையான குடிநீர் பிரச்சனையை போக்கும் வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.30,000- ரூபாய் ஒன்பது இலட்சத்து முப்பதாயிரம் மதிப்பில் நவீன குடிநீர் சுத்திகாிப்பு எந்திரத்தின் மூலமாக ரூ. 1 க்கு 1 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையிலான எந்திரத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகராட்சி பொறுப்பு ஆணையர் ஜீவசுப்பிரமணியன், அறந்தாங்கி போக்குவரத்து கிளை மேலாளாளர் முத்துராமன், சுகாதார ஆய்வாளர் சேகர், அறந்தாங்கி நகர கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனா்.




