Saturday, 29 April 2017

அட்ம்பூர் போர் ஆய்வு செய்தபோது

       ஆவுடையார்கோவில் ஒன்றியம் அடம்பூாில் வறட்சியின் காரணமாக ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்க புதிதாக போடப்பட்டு வரும் போரை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள்நோில்   சென்று ஆய்வு மேற்கொண்ட போது 




Friday, 28 April 2017

ஆவணம் - பெருங்குடி ஊராட்சி ஒன்றிய நநடுநலைப் பள்ளி ஆண்டு விழா

        புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம்-பெருங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள்  தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள். 
         
        விழாவில் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணிகளுக்கும், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் பாிசு வழங்கினார்.















Saturday, 22 April 2017

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூாி ஆய்வு

        புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும்  மருத்துவ கல்லூாி கட்டிடம் கட்டுமான நிறைவு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் கந்ததர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர், மருத்துதுவ குழுவினர் மற்றும் கழக நிர்வாகிகளுடன் நோில் சென்று பார்வையிட்டபோது












வறட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஆலோசனை கூட்டம்

      புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி. கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்த்துறை அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தில் வறட்சிக்கு நிதி ஒதுக்குவது சம்மந்தமாக ஆலோசனை நடத்தி விரைவில் குறைகள் நிவர்த்தி செய்யப்படம் என்றார்கள். 





Tuesday, 18 April 2017

அறந்தாங்கி நகராட்சியில் குடிசைமாற்று வாாியம் சார்பில் கான்கிாிட் வீடு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அறந்தாங்கி நகராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாாியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் மூலம் அறந்தாங்கி நகராட்சி வார்டு 2,5,9,11,12,13, 14, 18,19,21 ஆகிய வார்டுகளிலுள்ள 108 பயனாளிகளுக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பிலான 300 சதுர அடி கொண்ட கான்கிாிட் வீடு கட்ட ஆணை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் சார்பாக நகர கழக செயலாளர், உதவி செயற்பொளியாளர் த.கு.வா. பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் வீடு கட்டுவதற்கான தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது. மேலும் 5 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
விிழாவில் நகர கழக செயலாளர், வார்டு கழக செயலாளர்கள், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், சுப்பையா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கொண்டனர்.