Monday, 24 December 2018

31வது எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுநாள் மௌன அஞ்சலி


               புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31வது நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியிலுள்ள புரட்சித்தலைவர், பொன்மனசெம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை மாவட்ட மற்றும் அறந்தாங்கி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கழக அமைப்புச் செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினார்.
                எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து கழக தொண்டர்களுடன் மௌன ஊர்வலம் சென்று மாலை அனுவிக்கப்பட்டது. உடன் நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.செல்லக்கன்னு, த.செல்வராஜ், க.ராஜ்குமார், அலிஅக்பர், மற்றும் மாநில வழக்குரைஞர் அணி துணை செயலாளர் கார்த்திக் சேவுகப்பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் மணிவாசகம், நகர அவைத்தலைவர் முத்துக்கருப்பன், பிள்ளைவயல் பஞ்சநாதன், பாலாஜி, வட்ட கழக செயலாளர்கள், தனபால், அணி செயலாளர்கள், மகளிரணி செயலாளர்கள், கொடிவயல் சி.அடைக்கலம், திருவப்பாடி சற்குணம், ஏகணிவயல் முருகையன், நாகுடி சித்தசேனன், தட்டான்வயல் பழனியப்பன், திருவப்பாடி பழனிவேல், சாமிநாதன், மாவட்ட பிரதிநிதி எருக்கலக்கோட்டை பன்னீர்செல்வம், வேனுகோபால், மதன், சந்தமனை சரவணன், விஜயபுரம் ஆனந்த், ராமநாதன், கருப்பையா போலிஸ் ஓய்வு, குமார் போலிஸ் ஓய்வு, சுரேஷ், சுமதி, பூமணி, கருப்பையா மற்றம் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.













Wednesday, 12 December 2018

கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜேந்திரபுரம் ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலா அாிசி, சீனி மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை கழக அமைப்புச் செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் ராஜேந்திரபுரம் ஊராட்சியைச் சார்ந்த 1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
             நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் குழ.சண்முகநாதன், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் க.ராஜ்குமார், எருக்கலக்கோட்டை பன்னீர், கொடிவயல் அடைக்கலம், ஆயிங்குடி வினோத் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




















  

Wednesday, 5 December 2018

அம்மா அவர்களின் 2ம் ஆண்டு இதய அஞ்சலி

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகர கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அறந்தாங்கி நகரம் அண்ணா சிலையிலிருந்து காமராஜர் சிலை வழியாக காந்திபூங்கா சாலையில் சென்று பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்மா உணவகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
        நிகழ்சியை அறந்தாங்கி நகர கழக செயலாளர் க.சிவசண்முகம் தலைமை தாங்கினார். அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் த.செல்வராஜ், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் முத்துக்கருப்பன், பிள்ளைவயல் பஞ்சநாதன், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், சாமிநாதன், ஏகணிவயல் முருகையன், நாகுடி ராமசாமி, பழனிவேல்ராஜன், கருப்பையா, வேதபாபு, எல்.எண்.புரம் பாலாஜி, மதன், கொடிவயல் அடைக்கலம், கூகனூா் இளையராஜா, அரசர்குளம் வெங்கடேசன், காிசக்காடு சுப்பிரமணியன், ஆயிங்குடி வினோத், மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மாியாதை செலுத்தினார்கள்.