Monday, 5 October 2020

மஞ்சக்குடியில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியம், மஞ்சக்குடி கிராம மக்களின் நீண்டநாள் கோாிக்கையான பயணிகள் நிழற்குடை கேட்டு சட்டமன்ற உறுப்பினரை அனுகினர். உடனடியாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2018-19-லிருந்து ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்காளல் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நிகழச்சியில் கழக நிர்வாகிகளும் கிராமபொதுமக்களும் கலந்து கொண்டனர்.









ஒருங்கிணைந்த வேளாண்மை விாிவாக்க மையக் கட்டிடம் திறப்பு விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி ஒன்றியம் மூக்குடி கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஒருங்கணைந்த வேளாண்மை விாிவாக்க மையக் கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கானொளி காட்சி மூலமாக திற்ந்து வைத்தார். அதனை அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் குத்துவிளக்கேற்றி அலுவலக பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

      நிகழ்சியில் வேளாண் துணை இயக்குநர் சிவக்குமார், தோட்டக்கலைத்துறை இயக்நர் ரமேஷ், வேளாண்மைத்துறை அலுவலர்கள், மாறன், மகளிரணி கலாராணி, ராமு, மற்றும் கழக நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.