Thursday, 31 December 2020

விளானூர் ஊராட்சியில் புதிய ஆழ்குழாய் கிணறு பூமிபூஜை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், விளானூர் ஊராட்சி விளானூர் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களின் சீரிய முயற்சியில் 14 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் விளானூர் ஸ்ரீ அய்யனார்கோவில் அருகில் ரூ.19.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் அதே ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் மூலம் தனிநபர் குடியிருப்புக்கு பைப் லைன் இணைப்பிற்கான ரூ.7.65 இலட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், விளானூர் ஊராட்சி மன்ற தலைவர் க.சேதுபதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமரன், சரண், மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.        


 














Saturday, 26 December 2020

வீரமங்கலம் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் துவக்க விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சி சின்னவீரமங்கலம் கிராமத்தில் ரூ.29.65 இலட்சம் மற்றும் கறம்பக்குடி கிராமத்தில் 34.96 இலட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் மூலம் புதிய ஆழ்குழாய் கிணறு, பம்ப் ரூம் உட்பட தனிநபர் குடியிருப்பு பகுதிகளுக்கு பைப் லைன் கனெக்சன் வழங்கும் திட்டத்தினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இயந்திரத்தையும் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

               நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய கழக செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.











Thursday, 24 December 2020

அறந்தையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மறைந்த முன்னாள் முதல்வர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி நகர கழகம், அறந்தாங்கி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக அறந்தாங்கி நகரில் அண்ணா சிலையிலிருந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலை வரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் மௌன ஊாவலம் சென்று பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது.

























புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33 வது நினைவு நாள் உறுதிமொழி

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33 வது நினைவு நாளில் உறுதி மொழி கான கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

எம்.ஜி.ஆர் நினைவு நாள் 

https://www.youtube.com/watch?v=ErmkMrBcZgo&ab_channel=mlaAranthai

Tuesday, 22 December 2020

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நவீன குடிநீர் சுத்திகாிப்பு தானியங்கி எந்திரம் துவக்க விழா

         புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பயணிகளின் நீண்ட நாள் கோாிக்கையான குடிநீர் பிரச்சனையை போக்கும் வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.30,000- ரூபாய் ஒன்பது இலட்சத்து முப்பதாயிரம் மதிப்பில் நவீன குடிநீர் சுத்திகாிப்பு எந்திரத்தின் மூலமாக ரூ. 1 க்கு  1 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையிலான எந்திரத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

   நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகராட்சி பொறுப்பு ஆணையர் ஜீவசுப்பிரமணியன், அறந்தாங்கி போக்குவரத்து கிளை மேலாளாளர் முத்துராமன், சுகாதார ஆய்வாளர் சேகர், அறந்தாங்கி நகர கழக நிர்வாகிகள்  மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனா்.







Thursday, 3 December 2020

புரவி புயல் பாதிப்பு பகுதிகள் ஆய்வு

         புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் வட்டம் முத்துக்குடா முதல் மணமேல்குடி வட்டம் கோட்டைப்பட்டிணம், புதுக்குடி, அம்மாபட்டிணம், ஜெகதாப்பட்டிணம், மணமேல்குடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், கட்டுமாவடி வரையுள்ள கடற்கரை பகுதிகளில் புரவிப் புயலின் தாக்கம் மற்றும் முன்னெச்சாிக்கை பாதுகாப்பு குறித்தும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் நோில் சென்று பார்வையிட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன் சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.