புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளான பெருமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் - 30, கட்டுமாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் - 120, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் - 230, மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 296, அம்மாப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் - 79, விச்சூர் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் - 164, கோட்டைப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் - 38, அம்பலவாணனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் - 39 என மொத்தம் - 957 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.





































