புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகுடிக்கு வந்த காவோி நீரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ. இரத்தினசபாபதி அவர்கள் வரவேற்று திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை பகுதியான அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த விவசாயிகளின் விவசாய பயன்பாட்டிற்கு பருவமழை பெய்யாமல் பொய்த்துவிட்டதால். காவோியிலிருந்து வரும் பாசன நீர் அறந்தாங்கி தொகுதியின் கடைமடை பகுதியான நாகுடிக்கு வந்தபோது சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் செலல்வராஜ், புஷ்பராணி, வவிவசாய சங்க நிர்வாகிகள் சிங்கவனம் ஜமீன், ஆலடிக்காடு கணேசன், தினையாக்குடி சிவசுப்பிரமணியன், பொன்கணேசன், விவசாயிகள், ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேங்காய் உடைத்து மலர் தூவி வரவேற்றனர்.










