புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், வெட்டிவயல் ஊராட்சி குமரப்பன்வயல் கிராமத்திலுள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதை மாவட்ட கழக அவைத்தலைவரும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களிடம் கோாிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோாிக்கையை ஏற்று 2016-17 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று திறப்புவிழா மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், மாவட்ட கழக செயலாளர் இ.ஏ.கார்த்திகேயன் அவர்களும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.


