Monday, 4 November 2019

ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சேவை

           ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலைய சேவை பிரிவால் வழங்கவுள்ள புதிய அவசர சிகிச்சை ஊர்தி (Ambulance) சேவையினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் திரு சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று (04.11.2019) மதியம் 1.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் துவக்கி வைத்தார்.
              விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வாி, கந்தர்வகோட்டை எம்.எல.ஏ ஆறுமுகம், மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.