Friday, 21 February 2020

ஏம்பல் அரசு பள்ளியில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்

          அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அாிமளம் ஒன்றியம் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2017-18 -ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் மதிவண்டி நிறுத்தும் கூடாரம் ஆகியவற்றை இன்று சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
           நிகழ்ச்சியில் அாிமளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், குமரவேல் (வட்டார ஊராட்சி), ஆயிஷாராணி (கிராம ஊராட்சி),ஒன்றிய பெருந்தலைவர், ஏம்பல் ஊராட்சிமன்ற தலைவர் கனிமொழி முருகானந்தம், பள்ளி தலைமை ஆசிாியர், குமாரராஜா, குணா, சுப்பையா, இளையராஜா, மாாிமுத்து மறறும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.