Wednesday, 4 March 2020

பெருநாவலூர் அரசு கலைக்கல்லூாியைச் சுற்றி சுத்தம் செய்ததை ஆய்வு செய்தபோது

       அறந்தாங்கியில்  கடந்த  10 ஆண்டுகளுக்கு  முன் திருச்சிராப்பள்ளி  பாரதிதாசன்  பல்கலைக் கழகத்தால், பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியாக அரசினர் தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில்  தொடங்கப் பெற்றது. கடந்த  2015 ஆண்டில் அறந்தாங்கியை அடுத்துள்ள பெருநாவலூரில் தற்போதைய கட்டமைப்புடன் செயற்படத் தொடங்கியது. 2019 ஆண்டு முதல்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகத்    தொடர்ந்து இயங்கி  வரும்  இக்கல்லூரியின்  நான்கு புறங்களிலும்  அதிகளவு கருவேல மரங்களும் முட்புதர்களும் மண்டிக்கிடந்த நிலையில், தற்போது  இக்கல்லூரியின்  முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர் இரா.கண்ணன்  அவர்கள் இந்நிலைக்கான தீர்வு காணும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினரை அனுகி கோாிக்கை வைத்தார். அதன் பலனாக அறந்தாங்கி சட்டமன்ற  உறுப்பினர்  இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள், கல்லூரி  முதல்வர்  அவர்களின்  வேண்டுகோளை ஏற்று மாணவ,மாணவியர்  நலன் கருதி தனது சொந்த  செலவில் கல்லூரியைச் சுற்றிலும்  அடர்ந்துள்ள முட்புதர்களை அகற்றும் பணியை JCB இயந்திரம் கொண்டு தொடங்கி  வைத்தார்.    தொடங்கப்பட்டுள்ள பணிகளை  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், கல்லூரி முதல்வர்  அவர்களும் பார்வையிட்டனர். உடன் கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளனர்.