Monday, 25 May 2020

அறந்தாங்கி ஒன்றியத்தில் குடிமராமத்து பணி துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி ஒன்றியத்தைச் சார்ந்த குளத்தூர் கண்மாய் ரூ.54.25 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் கோங்குடி கண்மாய் ரூ.47.50 இலட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து பணிகள் 2020-21-ம் ஆம் ஆண்டில் செய்ய தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு குடிமராமத்துப் பணிக்கான துவக்க விழாவினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் இன்று துவக்கி வைத்த பொழுமு உடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஆயக்கட்டுதார்கள், ஆயக்கட்டு சங்க தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.