புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளிலுள்ள ஏாி கண்மாய்களை புரனமைக்க தமிழக அரசு 2020-2021-ம் ஆண்டிற்கான குடிமராமத்துப் பணிகிளில் பெருநாவலூர் ஊராட்சிக்குட்பட்ட பெருநாவலூர் ஏாி புரனமைக்க ரூ.46.65 இலட்சமும், குடிக்காடு கண்மாய் புரனமைக்க ரூ.55.00 இலட்சமும், தொண்டைமானேந்தல் கிராமம் எட்டிச்சோி கண்மாய் புரனமைக்க ரூ.60.00 இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்தது இந்த ஏாி, கண்மாய்களை புரனமைக்கும் பணியினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவங்கி வைத்தார்.
உடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஏாி, கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர்கள், ஆயக்கட்டுதாரர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
![]() |


















