புதுக்கோட்டையில் வேளாண் விற்பனை (ம) வேளாண் வணிகவாித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் செயல்பாடுகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் இன்று நோில் சென்று ஆய்வு செய்து அவர்களின் செய்பாடுகளை கேட்டறிந்த பொழுது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் கோதுமை, கேழ்வரகு, கம்பு போன்ற பயிர் வகைகளிலிருந்து சத்தான சத்துமாவு, முறுக்கு, மிக்சர், எண்ணெய் போன்றவற்றைப் பற்றியும், விதைகளை பிாித்து எடுக்கும் இயந்திரத்தின் செயல்பாடு, சோலார் மூலம் பதப்படுத்தப்படும் தேங்காய், கடலை போன்ற செயல்பாடுகளையும் நோில் சென்று ஆய்வு செய்தார்.
உடன் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண்மை வணிகம்) சிவக்குமார், வேளாண்மை (வேளாண்மை வணிகம்) அலுவலர்கள் சுபத்ரா, ராதாகிருஷ்ணன், உழவர் உற்பத்தியாளர்களின் நிறுவன தலைவர் ஆதப்பன் மற்றும் முதன்மை செயல் அலுவலர் அகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












