புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகரம், மேலப்பட்டு, கண்டிச்சங்காடு நிலையூர், மணமேல்குடி, கோட்டைப்பட்டிணம், அம்பலவாணனேந்தல், ஆவடையார்கோவில் மற்றும் ஒக்கூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பாிசுத்தொகை ரொக்கம் ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பினை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாாியத்தலைவருமான பி.கே.வைத்து அவர்களும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி ஆகியோரது தலைமையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் அறந்தாங்கி ஒன்றியம் மேலட்டு கிராமம், மணமேல்குடி ஒன்றியம் நிலையூர், ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஒக்கூர் கிராமங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளிக் மற்றும் மணமேல்குடி ஒன்றியம் அம்பலவாணனேந்தல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் முதல் கோட்டைப்பட்டிணம் பகுதிக்கு 108 ஆம்புலன் சேவை ஆகியவையும், மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டிணத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்படும் பயணிகள் நிழற்குடைக்கு பூமி பூஜை, ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு குளியலறை, உடைமாற்றும் அறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அம்மா பூங்கா, ஆவுடையார்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாாியத்தலைவருமான பி.கே.வைத்து அவர்களும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜநாயகம், அறந்தாங்கி நகர கழக நிர்வாகிகள், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்












