புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகாில் தொகுதி மக்களின் சார்பில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ. இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தாய்மார்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கண்ணு, அறந்தாங்கி நகர வட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆா மன்ற துணை தலைவர் மணிவாசகம், கொடிவயல் அடைக்கலம், காிசக்காடு சுப்பிரமணியன், ராஜேந்திரபுரம் பன்னீர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.












