புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ஆவுடையார்கோவில் ஒன்றியம், பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை மார்ச் 1ம் தேதி மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் நோில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மருத்துவர் இங்கு உள்ள பழைய கட்டிடத்தை இடித்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருமாறும், மேலும் இங்கு ஒரே ஒரு செவிலியர் மட்டும் பணியாற்றுகிறார். எங்களுக்கு மேலும் 7 செவிலியர்கள் தேவை என்பதை கோாிக்கையாகவும் வைத்தார். சட்டமன்ற உறுப்பினரும் விரைவில் துறை அமைச்சரை அனுகி காலியிடங்களை நிரப்புவதற்கு முயற்சி செய்கிறேன் என்றார்.
நிகழ்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து காண்டனர்.

