Saturday, 19 January 2019

டாக்டர் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

       புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டாக்டர் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குடி வட்டங்கச்சோி திடலில் நடைபெற்றது. நிகழ்சியில் கழக அமைப்பு செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
         வடக்கு மாவட்ட கழக செயலாளர் குழ.சண்முநாதன் நிகழ்சிக்கு தலைமை தாங்கினார். முன்னிலை ஆலங்குடி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், திருவரங்குளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நேசராசு, அறந்தாங்கி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப கழக செயலாளர் நாடிமுத்து மற்றும் தலைமை கழக பேச்சாளர் பழனிகுமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
     மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட பொருப்பாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.