Friday, 17 July 2020

புதுவாக்கோட்டையில் ஆழ்குழாய் திறப்பு விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பஞ்சாத்தி ஊராட்சி விடத்திரான்வயல் வயல் கிராமத்தில் மேலப்பருத்தினி கேணிகரை அருகில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.8,00,000 மதிப்பில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டாருடன் கூடிய பம்ப் ரூம் இந்த கொடுரமான கொரோனா காலத்திலும் மக்களுக்காக அயராது உழைத்துக்கொண்டிருக்கும் நமது சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்காளால் இன்று திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
       நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி கருப்பையா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராசாத்தி, சுதாகர், தேவி, கலைச்செல்வி, சந்திரா மற்றும் கிராமத்தார்கள் சந்திரன், கந்தவேளார், கருப்பையா வேளார், கிட்டு வேளார், கருப்பையாசேர்வை, இருளப்பன், மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.