Thursday, 1 March 2018

ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் ஆய்வு பணி

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் ஊராட்சி ஆவாரங்குடி, கரூர் ஊராட்சி குமுளுர், சாட்டியக்குடி ஊராட்சி நல்கிராமம், அமரடக்கி ஊராட்சி அமரடக்கி, பொன்பேத்தி ஊராட்சி பருத்திவயல், தீயத்தூர் ஊராட்சி தீயத்தூர் மற்றும் கதிராமங்கலம் ஊராட்சி பொன்சிறுவரை ஆகிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சாிசெய்யும் விதத்தில் நவீன தொழில் நுட்பத்தில் பயன்படுத்தக் கூடிய நீருற்று உள்ள இடத்தை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் ஆய்வு செய்த போது.
                     உடன் ஊராட்சி ஒன்றிய ஆணையர், கிராம ஊராட்சி ஆணையர், ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு, கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 10திற்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் இருப்பதாக கண்டறியப்பட்டது.


















No comments:

Post a Comment