புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அறந்தாங்கி நகராட்சி வார்டு 1 முதல் 5 வரையுள்ள பகுதிகளில் நடைபெறவிருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றவும், வார்டுகளில் உள்ள குறைகளை கேட்டு அதற்கான தீர்வு காண்பதற்காகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மற்றும் மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து ஆகியோாின் ஆலோசனையின் படி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜநாயகம், அறந்தாங்கி ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, மாவட்ட சிறுபான்மை செயலாளர் லியாக்கத் அலி ஆகியோருடன் முதல் 5 வார்டுகளில் உள்ள குறைகளை கேட்டறிந்தனர்.
நிகழச்சிக்கு நகர கழக செயலாளா் ஆதிமோகன், மண்டலமுத்து, மற்றும் அந்தந்த வட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, கழிவு நீர் பிரச்சனை, இலவச வீட்டுமனை வழங்க கேட்டு மக்கள் மனு கொடுத்தனர்.











No comments:
Post a Comment