Thursday, 21 May 2020

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய மானிய விலையில் டிராக்டர் வழங்குதல்

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் மற்றும் அறந்தாங்கி வட்டார வேளாண்மை விாிவாக்கம் மையங்கள் மூலமாக 100 விவசாயிகள் கொண்ட உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு தமிழக அரசு மூலம் மானிய விலையில் டிராக்டர் மற்றும் பவர் டில்லர்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசாபதி அவர்கள் அறந்தாங்கி வட்டார வுளா்மை விாிவாக்க மையத்தில் வழங்கினார். 
         இதில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 4 டிராக்டர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியமும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 3 டிராக்டர்களும், 1 பவர் டில்லரும் வழங்கப்பட்டது. டிராக்டருக்கு தலா ரூ.5 லட்சமும், பவர் டில்லருக்கு ரூ.1 இலட்சமும் மானியமாக வழங்கப்பட்டது. 
              நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சக்திவேல், மாவட்ட ஆட்சியாின் நேர்முக உதவியாளா் வேளாண்மை சுப்புராஜ், துணை இயக்குநர் உழவர் பயிற்ச்சி மையம் பொியசாமி, வேளாண்மை  துணை இயக்குநர் மாநில திட்டம் மோகன்ராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் ஆவுடையார்கோவில் ஜெயபாலன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அறந்தாங்கி சொர்ணபாரதி ஆகியயோர் கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment