Monday, 8 June 2020

சித்திரம்பூாில் 16.86 கோடியில் கட்டப்பட்ட பாலம் மற்றும் எழுநூற்றிமங்கலத்தில் 1500 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு துவக்க விழா

தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்புத் துறையின் மூலமாக புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம் எழுநூற்றிமங்களம் கிராமத்தில் புதிதாக ரூ.1.50 கோடியில் 1500 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டிடத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கானொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அறந்தாங்கி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மற்றும் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அரிமளம் ஒன்றியம் சித்திரம்பூர் கிராமத்தில் பாம்பார் ஆற்றின் குறுக்கே ரூ.16.86 கோடியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் சார்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தையும் கானொளி காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியிலும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.

நிழச்சியில் இரண்டு துறைகளையும் சார்ந்த அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






































 


No comments:

Post a Comment