Thursday, 12 January 2017

அறந்தாங்கி ஒன்றியத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட பயணாளிகளுக்கு தாலிக்கு தங்கம் 4 கிராம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையேற்று பயணாளிகளுக்கு தங்கம் வழங்கினார்.



 விழாவில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், அறந்தாங்கி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment