புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகர கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அறந்தாங்கி நகரம் அண்ணா சிலையிலிருந்து காமராஜர் சிலை வழியாக காந்திபூங்கா சாலையில் சென்று பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்மா உணவகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்சியை அறந்தாங்கி நகர கழக செயலாளர் க.சிவசண்முகம் தலைமை தாங்கினார். அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் த.செல்வராஜ், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் முத்துக்கருப்பன், பிள்ளைவயல் பஞ்சநாதன், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், சாமிநாதன், ஏகணிவயல் முருகையன், நாகுடி ராமசாமி, பழனிவேல்ராஜன், கருப்பையா, வேதபாபு, எல்.எண்.புரம் பாலாஜி, மதன், கொடிவயல் அடைக்கலம், கூகனூா் இளையராஜா, அரசர்குளம் வெங்கடேசன், காிசக்காடு சுப்பிரமணியன், ஆயிங்குடி வினோத், மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மாியாதை செலுத்தினார்கள்.






















No comments:
Post a Comment